மாநில அரசு பஸ்களை இயக்க பெண் ஓட்டுநர்களை நியமிக்க ஒடிசா அரசு திட்டம்..! - Seithipunal
Seithipunal


மாநில அரசால் இயக்கப்படும் பஸ்களை இயக்க பெண் ஓட்டுநர்களை நியமிக்க ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது. சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிருஷ்ண சந்திர மொகபத்ரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கபட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதாவது, பெண்களின் பாதுகாப்பு மற்றும் பாலின சமத்துவ வேலைவாய்ப்பின் முக்கியத்துவத்தை அமைச்சர் எடுத்து கூறியதாகவும், மாநில பஸ் சேவையை இயக்கும் தலைநகர பிராந்திய நகர்ப்புற போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த 20 பெண் விண்ணப்பதாரர்கள் சிறப்பு மின்சாரப் பஸ் ஓட்டுநர் பயிற்சி பெறுவதற்காக ஜனவரி 31 அன்று புனேவுக்கு அனுப்பப்படுவார்கள் என்று அவர் மேலும், தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 03 அன்று ரூபாலி சதுக்கத்தில் மாநில அரசுப் பஸ் தொடர்பான விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஏற்பட்ட பொதுமக்களின் கொந்தளிப்பை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தலைநகர பிராந்திய நகர்ப்புற போக்குவரத்து வளாகத்தில் விரைவில் பிரத்யேக ஓட்டுநர் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் கிருஷ்ண சந்திர மொகபத்ரா கூறியுள்ளார். இந்த நிறுவனம் நடைமுறை ஓட்டுநர் திறன்கள், நடத்தை பயிற்சி, போக்குவரத்து விதிகள், வழித்தட ஒழுக்கம் மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Odisha government plans to appoint female drivers to operate state run buses


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->