வங்கதேசத்தில் காணாமல் போன இந்து மாணவன் மர்மமான முறையில் மரணம்; தொடரும் பதற்றம்..!
Hindu student dies under mysterious circumstances in Bangladesh
வங்கதேசத்தில் மாணவர் இயக்க தலைவர் கொல்லப்பட்டதையடுத்து அங்கு வன்முறை வெடித்தது. அதன் பின்னர் அந்நாட்டில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
இதுவரை வெவ்வேறு சந்தர்ப்பங்களில், 09 இந்துக்கள் இதுவரை கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்து மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த மாணவன் போகுரா மாவட்டம் சந்தாஹார் பகுதியை சேர்ந்தவர் கல்லூரி மாணவர் அபி என தெரியவந்துள்ளது. கடந்த 11-ஆம் தேதி மாயமான நிலையில், நவுகான் நகரில் ஆற்றில் உயிரிழந்த நிலையில், உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆனால்இவர் எப்படி உயிரிழந்தார் இறந்தார் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Hindu student dies under mysterious circumstances in Bangladesh