கேரளாவில் கொடூரம்: பூச்சிக்கொல்லி மருந்து கொடுத்து இளைஞரை கொன்ற கள்ளக்காதலி!
Brutality in Kerala A fake lover killed a young man by giving him pesticide
கேரள மாநிலத்தில் கள்ளக்காதலுக்குப் பின்னால் நிகழ்ந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 38 வயதான அன்சில் என்பவர், தனது காதலியான 30 வயதுடைய அதீனா மூலம் விஷம் கொடுத்து கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எர்ணாகுளம் மாவட்டம் கொத்தமங்கலம் அருகே மதிராப்பள்ளியைச் சேர்ந்த அன்சில், திருமணமாகி குடும்பத்துடன் வாழ்ந்து வந்தவர். இவருக்கு சோலாடு பகுதியைச் சேர்ந்த அதீனா என்ற இளம்பெண்ணுடன் கடந்த சில மாதங்களாக தொடர்பு இருந்தது. இந்த உறவு கள்ளக்காதலாக மாறிய நிலையில், அன்சில் அடிக்கடி அதீனாவின் வீட்டிற்கு சென்று தங்கியிருந்துள்ளார்.
ஜூலை 29-ஆம் தேதி அதீனாவின் வீட்டுக்கு சென்ற அன்சில், அடுத்த நாள் அதிகாலையில் மயங்கி கிடந்தார். அதீனா இதுகுறித்து அவரது நண்பர்களுக்கு தகவல் அளித்ததையடுத்து, அன்சிலை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
தொலைவில் இருந்து தகவலறிந்த போலீசார், தற்கொலை முயற்சி என சந்தேகித்து வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், மருத்துவமனையில் அன்சிலிடம் இருந்து போலீசார் பெற்ற வாக்குமூலம் திருப்புமுனையை ஏற்படுத்தியது – அதீனாவே விஷம் கொடுத்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
அன்சில் பின்னர் உயிரிழந்தார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் அதீனா கைது செய்யப்பட, விசாரணையில் பூச்சிக்கொல்லி மருந்து கொடுத்தது ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அன்சிலையும் அதீனாவையும் நீண்ட நாட்களாக பழகியவர்கள் என்பது உறுதி. ஆனால் அதீனா எதற்காக கொலைக்கு முனைந்தார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. இது தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
English Summary
Brutality in Kerala A fake lover killed a young man by giving him pesticide