கோவையில் அரங்கேறிய கொடூரம்! கல்லூரி மாணவரைப் போட்டுத் தள்ளிய 5 பேர் கொண்ட கும்பல் கைது...! பின்னணி என்ன...?
brutal incident Coimbatore gang of 5 people who murder college student arrested What is the background
கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்த அமுதன் (19) என்ற மாணவர் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 17 வயது சிறுவன் உள்பட 5 பேரை காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அமுதன், கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். சம்பவத்தன்று நண்பருடன் மலுமிச்சம்பட்டி பகுதியில் சென்றபோது, அதே கல்லூரியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அவர்களை வழிமறித்து அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கைப்பேசி பறிப்பு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அமுதனை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் விடுதி அறைக்கும் அழைத்துச் சென்று தாக்கியதில் அவர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
முதற்கட்ட விசாரணையில், கடந்த 9-ந்தேதி 3-ம் ஆண்டு மாணவர்கள் சிலர் முகமூடி அணிந்து 4-ம் ஆண்டு மாணவர்களின் அறைக்குச் சென்று கைப்பேசிகளை பறித்ததாகவும், அப்போது அமுதனின் முகமூடி விலகியதால் அவரை அடையாளம் கண்டுகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாகவே தாக்குதல் நடந்ததாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், கைப்பேசி பறிப்பு தொடர்பாக 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, போதைப்பொருள் விற்பனை தொடர்பாக தகவல் தெரிவித்ததற்காகவே அமுதன் கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்தும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
brutal incident Coimbatore gang of 5 people who murder college student arrested What is the background