வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே மலரும் பிரம்மகமலம் பூ..!
Brahmagamalam flower blooms only once a year
வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் மலர் கடந்த பவுர்ணமி அன்று மலர்ந்தது.
இயற்கை தன்னகத்தே பல ஆச்சரியங்களை உள்ளடக்கியது. தாவரங்களில் உள்ள ரகசியங்களை கண்டறிய பல காலங்களாக முயற்சி செய்து வந்தாலும் அவை மனித அறிவுக்கு புலப்படாத ஒன்றாக இருக்கிறது. அப்படி ஒரு அதிசயம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.
பிரம்மனின் நாடிக் கொடி என வர்ணிக்கப்படும் பிரம்மகமலம் பூ. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும். இந்த பூ பவுர்ணமி சமயங்களில் இரவு நேரங்களில் மலர்ந்து அடுத்த நாள் வாடி போய்விடும்.

இந்த பூவின் வாசம் அந்த பகுதி முழுவதும் பரவிகாணப்படும். இந்தநிலையில், இந்த பூ திருப்பூர் பல்லடம் பகுதியை சேர்ந்த சுப்பையா என்பவரின் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்தது. கடந்த பவுர்ணமியின் போது பிரம்ம கமலம் பூ மலந்துள்ளது. வெளிர் வண்ணத்தில் நறுமணத்துடன் பூத்த அந்த மலரை அக்கம்பக்கதினர் வந்து பார்த்து சென்றனர்.
English Summary
Brahmagamalam flower blooms only once a year