பள்ளி மாணவியை கடத்திச் சென்ற இளைஞர்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகிலுள்ள பெரிய கண்ணாடி காலனியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் சூரிய மூர்த்தி (25). இவர் டிப்ளமோ படித்து விட்டு கூலி வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் இவர் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 17 வயது பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி கடந்த 17-3-2020 அன்று திருச்சிக்கு கடத்தி சென்றுள்ளார். அதன் பின்னர் தம்பி பேட்டைக்கு உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த வழக்கை விசாரித்த ஆய்வாளர் விஷ்ணுபிரியா வழக்குப்பதிவு செய்து சூரிய மூர்த்தியை கைது செய்தார். இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம் எழிலரசி சூரியமூர்த்தி 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், நான்காயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதனையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசிடம் இருந்து ரூபாய் 5 லட்சம் பெற்று மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் எஸ் கலைச்செல்வி கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boy kidnapped school girl in Neyveli


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->