உஷார் மக்களே! நாய் கடித்த 21-வது நாளில் ரேபிஸ் நோய் தாக்கி சிறுவன் பரிதாப பலி...! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நந்தலால் மற்றும் ரேகா தம்பதியரின் மூன்றரை வயது மகன் 'சத்யா', தந்தைத் தாயுடன் கிருஷ்ணகிரி மாவட்டம் மாசி நாயக்கன பள்ளி கிராமத்தில் ராமமூர்த்தியின் பசுமை குடிலில் வசித்து வந்தார். அங்கு இந்த சிறுவனின் பெற்றோர், கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி சத்யா வெளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென தெருநாய் ஒன்று தாக்கி, முகம் மற்றும் கைகளில் கடுமையாகக் கடித்தது. அங்கு குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து அவரை காப்பாற்றினர்.

உடனடியாக ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், பல தினங்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நேற்று மாலை கழிவறைக்குச் சென்றபோது சத்யா மயங்கி விழுந்தார்.

அங்கிருந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதையடுத்து, மருத்துவர்கள் பரிசோதித்ததில், நாய் கடித்த 21-வது நாளில் ரேபிஸ் நோய் தாக்கி சத்யா உயிரிழந்தது வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கெலமங்கலம் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

boy died tragically from rabies 21 days after being bitten by dog


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->