தவெகவில் இணையும் திண்டுக்கல் மாஜி திமுக தலை? தவெகக்கு 24 மனை தெலுங்கு செட்டியார் சங்கம் ஆதரவு? பரபரப்பாகும் பூட்டு நகரம்!
Former DMK leader of Dindigul to join Tvk 24 member Telugu Chettiar Sangam supports Thavega Lockdown city is a hot topic
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (TVK) தனது அமைப்பு மற்றும் கூட்டணி பலத்தை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தின் முக்கிய சமூக அமைப்புகளில் ஒன்றான 24 மனை தெலுங்கு செட்டியார் செயல் சங்கம் விஜய்க்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
மாவட்ட, ஒன்றிய, பூத் மட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர் தேர்வு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 234 தொகுதிகளிலும் போட்டியிடும் இலக்குடன் கட்சி தயாராகி வருகிறது. மேலும் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் விஜய் கூட்டணிக்கு வரலாம் என்ற பேச்சும் நீடித்து வருகிறது.
இந்த சூழலில், 24 மனை தெலுங்கு செட்டியார் செயல் சங்கம் விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் மற்றும் திண்டுக்கல் முன்னாள் நகர்மன்றத் தலைவருமான ஆர். நடராஜன், திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
நடராஜன், திமுகவில் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல் மாநகராட்சி உருவாகும் முன் நகர்மன்றத் தலைவராக இருந்த அவர், மாவட்டம் முழுவதும் செல்வாக்கு கொண்டவராக அறியப்படுகிறார். திமுகவிலிருந்து விலகிய பின்னர் தனது சமூக அமைப்பின் பணிகளில் கவனம் செலுத்தி வந்தார்.
சமீபத்தில் நடைபெற்ற அந்த அமைப்பின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், பெரும்பாலான நிர்வாகிகள் விஜய்க்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கருத்து தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
திண்டுக்கல் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், திமுகவில் அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகன் ஐ.பி. செந்தில் குமார் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் பேசப்படுகிறது.
இந்த நிலையில், விஜய் கட்சியின் சார்பில் நடராஜன் போட்டியிட்டால், திண்டுக்கல் தொகுதியில் மூவலர் மோதல் உருவாகும் சூழல் உள்ளது. திமுகவில் இருந்து வந்தவர் என்பதால், நடராஜன் போட்டியிடுவது திமுக வேட்பாளருக்கு சவாலாக அமையலாம் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் அதிமுகவுக்கும் இது கடினமான போட்டியாக இருக்கக்கூடும்.
சமூக அமைப்புகளின் ஆதரவு தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். குறிப்பாக சில தொகுதிகளில் சமூக வாக்குகள் தீர்மானிக்கும் வகையில் இருப்பதால், இந்த நகர்வு முக்கியத்துவம் பெறுகிறது.
இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், 24 மனை தெலுங்கு செட்டியார் சங்கம் இறுதியாக எந்த நிலைப்பாட்டை எடுக்கிறது? நடராஜன் உண்மையில் விஜய் கட்சியில் இணைந்து போட்டியிடுகிறாரா? என்பது குறித்து விரைவில் தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மொத்தத்தில், திண்டுக்கல் அரசியல் களம் 2026 தேர்தலை முன்னிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
English Summary
Former DMK leader of Dindigul to join Tvk 24 member Telugu Chettiar Sangam supports Thavega Lockdown city is a hot topic