பெரம்பூரில் களமிறங்கத் தயாராகும் விஜய்? திமுக கோட்டையில் ஓட்டை! டேட்டாவால் விஜய் குஷி.. டிக் அடித்தது எப்படி?
Vijay preparing to contest in Perambur A hole in the DMK fortress Vijay Kushi due to data How did he get a tick
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கட்சியின் சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் அமைதியாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிகள் வலுவாக தயாராகிக் கொண்டிருக்கும் சூழலில், நாம் தமிழர் கட்சியும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இந்த நான்கு முனைப் போட்டி நிலவரத்தில், புதிய அரசியல் சக்தியாக தமிழக வெற்றிக் கழகத்தை களமிறக்கியுள்ள விஜய், தானும் தேர்தலில் போட்டியிடுவார் என கட்சியினர் கூறி வருகின்றனர்.
முன்னதாக ‘வி’ எழுத்தில் தொடங்கும் தொகுதிகள் விஜயின் விருப்பப் பட்டியலில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. விருகம்பாக்கம், விழுப்புரம், விருத்தாச்சலம் உள்ளிட்ட தொகுதிகள் பேசப்பட்டன. ஆனால் தற்போது சென்னை பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் வியாசர்பாடியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில், பெரம்பூரில் விஜய் போட்டியிட வேண்டும் என்ற தீர்மானம் முன்வைக்கப்பட்டதாகவும், அதற்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. கட்சியினர் மேற்கொண்ட உள்சர்வே முடிவுகளும் பெரம்பூர் தொகுதி சாதகமாக இருப்பதை சுட்டிக்காட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரம்பூர் தொகுதியில் தொழிலாளர் மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் அதிகம் வசித்து வருவது முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. அடித்தட்டு மக்களின் ஆதரவை பெறும் வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை போன்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நகரில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க வேண்டும் என்ற எண்ணமும் இந்தத் தீர்மானத்திற்கு காரணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சென்னை நகரில் திமுக வலுவான ஆதரவு கொண்ட பகுதிகளில் ஒன்றாக பெரம்பூர் கருதப்படுகிறது. அங்கு விஜய் போட்டியிட்டால் அது நேரடி அரசியல் சவாலாக அமையும் என அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர். இதனால் அந்த தொகுதி தேர்தல் காலத்தில் மாநில அளவிலான கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பு உள்ளது.
இன்னும் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. எனினும், விஜயின் ஒவ்வொரு அரசியல் நகர்வும் தீவிரமாக கவனிக்கப்பட்டு வருகிறது. பெரம்பூரில் அவர் போட்டியிடுவது உறுதி செய்யப்படும் பட்சத்தில், 2026 தேர்தல் களத்தில் அது முக்கிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Vijay preparing to contest in Perambur A hole in the DMK fortress Vijay Kushi due to data How did he get a tick