அதிர்ச்சி - ஈரோட்டில் எலிக்காய்ச்சல் பாதிப்பால் சிறுவன் பலி.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள, அந்தியூர் அருகே காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி – நிர்மலா தம்பதியினர். இவர்களுடைய மகன் தினேஷ்குமாருக்கு கடந்த மாதம் 16 ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. 

இதையடுத்து அவர் 19ம் தேதி, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினமே, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்த சிறுவனுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், கடந்த, 28 ஆம் தேதி அவருக்கு எலி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதற்கான சிகிச்சை வழங்கபட்ட நிலையில், கடந்த 29 ஆம் தேதி சிறுவன் உயிரிழந்தான். 

இதையடுத்து, மருத்துவ ஊழியர்கள் காட்டூர் மட்டுமின்றி, பக்கத்து கிராமங்களிலும் முகாமிட்டு, வீடு வீடாகச் சென்று காய்ச்சல், சளி, இருமல் குறித்து பரிசோதனை செய்து வருகின்றனர். 

இந்தசோதனையில், அதே கிராமத்தைச் சேர்ந்த ரதி என்ற 36 வயது பெண்ணுக்கும் எலி காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது. உடனே அவர், ஈரோடு அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தற்போது, அவரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy died for rat fever attack in erode


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->