6ஆவது முறையாக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்!
Bomb threat at the Governors Palace for the sixth time
6வது முறையாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு இ-மெயில் மூலம் மர்ம நபர் விடுத்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவையில் சமீப காலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டே இருக்கிறது .ஆளுநர் மாளிகை முதலமைச்சர் வீடு ,பிரபல ஹோட்டல்கள் ,கலெக்டர் ஆபீஸ் போன்ற இடங்களுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவது மக்களை பீதியடைய செய்துள்ளது.
காவல்துறையினர் இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை பிடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால் அது பலனளிக்கவில்லை, உள்துறை அமைச்சர் நமச்சிவாய அவர்களும் குற்றவாளிகளை கண்டிப்பாக கண்டுபிடித்து விடுவோம் என்று கூறி வந்தார். ஆனால் இதுவரை எந்த குற்றவாளிகளையும் காவல்துறை கைது செய்யவில்லை. இந்த நிலையில் இன்று 6முறையாக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது
6வது முறையாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு இ-மெயில் மூலம் மர்ம நபர் விடுத்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.
மிரட்டலை தொடர்ந்து காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு கடந்த 2 மாதங்களில் 6ஆவது முறையாக இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Bomb threat at the Governors Palace for the sixth time