மீன்பிடித் தடைகாலம் நிறைவடைவதால் படகு சரி செய்யும் பணி தீவிரம்.!! - Seithipunal
Seithipunal


மீன்பிடித் தடைகாலம் நிறைவடைவதால் படகு சரி செய்யும் பணி தீவிரம்.!!

ஒவ்வொரு ஆண்டும் கடலில் மீன்வளத்தை பெருக்குவதற்காக 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மீன்களின் இனப்பெருக்க காலத்தை ஒட்டி கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி நள்ளிரவு முதல் 61 நாட்களுக்கு வங்கக்கடல் பகுதியில் மீன் பிடித் தடைக் காலம் அமல்படுத்தப்பட்டது. 

இந்தத் தடைக்காலம் ஜூன் 14-ம் தேதியான நாளை நள்ளிரவு முடிவடைகிறது. இதனால், மீனவர்கள் தங்கள் படகுகளையும், வலைகளையும் சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், நாளை முதல் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்கின்றனர். 

இது குறித்த முறையான அறிவிப்பு கடலூர் மாவட்டத்தில் மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், "கடலூர் மாவட்டத்திலுள்ள இயந்திரம் பொருத்திய மற்றும் பொருத்தப்படாத நாட்டுப்படகுகளுக்கு நாளை 14-ம் தேதி முதலும், விசைப்படகுகளுக்கு 15-ம் தேதி முதலும்  கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. 

மீனவர்கள் கடலுக்குச் செல்லும் போது உயிர்காப்பு உபகரணங்கள் மற்றும் தொலைதொடர்பு சாதனங்களை தவறாது உடன் எடுத்துச் சென்று பாதுகாப்பான முறையில் மீன்பிடிப்பு மேற்கொள்ளுமாறு மீனவர்களை கடலூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவிப்பின் மூலம் அறிவுறுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boat repair work start for fishing ban period ends


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->