ஓவியர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்த தமிழக அரசு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ரத்தத்தில் ஓவியம் வரையும் கலை வெகுவாக கவர்ந்து வருகிறது. தங்களுடைய ரத்தத்தால் வரையப்படும் ஓவியங்களை தங்கள் பிரியமானவர்களுக்கு கொடுத்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

இந்த ரத்தத்தால் வரையப்படும் ஓவியங்களால் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழகத்தில் ரத்தத்தில் வரையப்படும் ஓவியங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

மேலும், ரத்தத்தால் ஓவியங்கள் வரைந்து கொடுக்கும் நிறுவனங்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் எனவும் எச்சரித்துள்ளது. இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய ஓவியங்களை வரைவதற்கு ரத்தம் எந்த முறையில் எடுக்கப்படுகிறது என்பது தெரியவில்லை. எனவே உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் நிலை உள்ளதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Blood art banned in tamilnadu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->