கட்சியில் சேர்க்காவிட்டாலும் எனது ஓட்டு பாஜகவுக்கு தான் - காயத்ரி ரகுராம்.!  - Seithipunal
Seithipunal


தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருந்தவர் காயத்ரி ரகுராம். இவர் நேற்று தனது ட்விட்டரில் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், அதனால் கட்சியில் இருந்து விலகுவதாக தகவல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவர் கட்சியில் இருந்து விலகியது தொடர்பான காரணம் குறித்து பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- 

"பாஜக கட்சியில் இருந்து 'சஸ்பெண்டு' ஆகி இருக்கிறேன் என்பது மட்டும் தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதையும் தாண்டி துபாயில் என்னென்ன விஷயங்கள் நடந்தது என்பது குறித்து அனைத்தும் பத்திரிகைகளில் வந்துள்ளது. 150 பேர் இருக்கும் ஒரு ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை என்னை பற்றி தரக்குறைவாக பேசி உள்ளார். 

பாஜகவில், ஆடியோ மற்றும் வீடியோ விவகாரத்தில் எவ்வளவோ பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். அவர்களுக்கான நீதி எங்கே? அவர்கள் அனைவரும் வெளியே வந்து பேசுவதற்கு பயப்படலாம். அவர்களின் பதவி பறி போகலாம் அல்லது அவர்கள் குடும்ப ரீதியாக மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். 

பாஜகவில் இருந்து அழைப்பு வந்தால் கண்டிப்பாக மீண்டும் சேருவேன். இது என் தாய்வீடு என்று சொல்லி இருக்கிறேன். கட்சியில் சேர்க்காவிட்டால் கூட எனது ஓட்டு பா.ஜனதாவுக்குத் தான்" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp party leader gayathri raguram press meet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->