பா.ஜ.க பிரமுகர் உமாசங்கர் கொலை வழக்கு.. பா.ஜ.க MLA-க்கள் மத்திய அமைச்சரிடம் மனு!
BJP leader Umashankar murder case BJP MLAs petition Union Minister
பா.ஜ.க பிரமுகர் உமாசங்கர் கொலை வழக்கில் CBI மூலம் நீதி விசாரணை வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் தலைமையில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சரிடம் மனு அளித்தனர்.
புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் துணைத் தலைவராக இருந்த உமாசங்கர் சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்த ரவுடி கர்ணா தலைமையிலான கும்பல் கடந்த 26.04.2025 நள்ளிரவில் படுகொலை செய்ததாக லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் சாமிப்பிள்ளை தோட்டத்தை சேர்ந்த ரவுடி கர்ணா மற்றும் அவரது கூட்டாளிகளை காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். இருப்பினும் உமாசங்கர் கொலை தொடர்பாக பல்வேறு குழப்பங்களும் மாறுபட்ட கருத்துக்களும் நிலவிவரும் நிலையில் மத்திய புலனாய்வு துறை (CBI) மூலம் நீதி விசாரணை செய்ய வேண்டும் என மாண்புமிகு காலாப்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் தலைமையில் பா.ஜ.க சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் தலைமையில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான் குமார், விவில்லியன் ரிச்சர்ட்ஸ் ஜான் குமார், பா.ஜ.க ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் சிவசங்கரன் மற்றும் கொல்லப்பள்ளி ஶ்ரீநிவாஸ் மத்திய புலனாய்வு துறை அமைச்சர் ஜித்தேந்தர் சிங்கை புது டெல்லி நாடாளுமன்ற அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
English Summary
BJP leader Umashankar murder case BJP MLAs petition Union Minister