அமெரிக்காவில் இருந்து திரும்பியவுடன் ஸ்டாலினை போட்டுத் தாக்கிய அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


பாஜக தமிழகத்தில் முழுமையாக வளர்ந்து விட்டால் ஸ்டாலினால் தூங்க முடியாது!

அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர் ஒருவர் திமுக பொதுக் குழுவில் ஸ்டாலின் நிர்வாகிகளாலும் அமைச்சர்களாலும் தூக்கம் வரவில்லை என பேசியது பற்றி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அண்ணாமலை "ஐந்து ஆண்களுக்கு முன்பு தமிழகத்தில் பாஜக என்ற ஒரு கட்சியை இல்லை என்று பேசிய ஸ்டாலின் இன்று பாஜக தான் நம்முடைய முதல் எதிரி என பேசுகிறார். இதை பார்க்கும் பொழுது தமிழகத்தில் பாஜக எவ்வளவு பெரிய அளவில் வளர்ந்து கொண்டிருக்கிறது என தெரிகிறது. எப்பொழுதும் இல்லாத அளவிற்கு ஸ்டாலின் தற்பொழுது பாஜகவை தாக்கி பேசியுள்ளார்.

பாஜக ஏதாவது செய்து மீண்டும் 2024ல் ஆட்சியை பிடித்து விடுவார்கள் என பேசியுள்ளார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பாஜகவை பற்றியே ஸ்டாலின் பேசியுள்ளார். இதை பார்க்கும் பொழுது அவருக்கு எந்த அளவுக்கு பயம் தொற்றியுள்ளது என தெரிகிறது. முதலமைச்சருக்கு இரண்டு விதமான பயம் வந்துள்ளது. அவருடைய கட்சியைச் சார்ந்த நிர்வாகிகளும் அமைச்சர்களும் யார், என்ன, எப்பொழுது செய்வார்கள், எப்படி செய்வார்கள் என பயத்தில் உள்ளார். அடுத்த பயம் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியை கண்டு பயம். இது இரண்டும் சேர்ந்து கொண்டு ஸ்டாலினின் தூக்கத்தை கெடுக்கிறது.

எனவே தயவு செய்து திமுகவின் அமைச்சர்களும் நிர்வாகிகளும் ஸ்டாலினை தூங்க விடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் உள்ள எட்டரை கோடி மக்களின் முதல்வராக இருக்கும் ஸ்டாலின் அவர்கள் நிம்மதியாக தூங்க வேண்டும். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப் இப்படி தூங்காமல் இருந்து கடைசியில் என்ன ஆனார் என்பது அனைவரும் அறிந்ததே. பாஜக தமிழகத்தில் முழுமையாக வளர்ச்சி பெற்ற பிறகு ஸ்டாலினால் தூங்க முடியாத நிலை உருவாகி விடும். எனவே தற்போதாவது அவரை திமுகவின் தோழர்கள் தூங்க விடுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என பேசி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP is fully grown in Tamil Nadu Stalin will not be able to sleep


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->