தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்! பாமக, தமாக-விற்கு பாஜக அழைப்பு! - Seithipunal
Seithipunal


தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாஜகத் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தற்போது பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் ஆகியோருக்கும் பாஜக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வருகின்ற 18ஆம் தேதி, தலைநகர் டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக, பாஜக தலைவர் ஜே பி நட்டா அறிவித்துள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சிகள் பங்கேற்று, வருகின்ற மக்களவை பொதுத்தேர்தல் குறித்து பல முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர்.

இந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்திற்கு, நாடு முழுவதும் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு பாஜக தரப்பில் அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. 

தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக, இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் ஆகியோருக்கும் பாஜக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை வெளியான தகவலின் படி இந்த மூன்று கட்சிகளுக்கு மட்டுமே பாஜக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்களுக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP call PMK And TMC for NDA Meet


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->