இனி டாஸ்மாக் கடைகளில் கம்பியூட்டர் பில்.. ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதி.!
Billing and online payment method introduce in tasmac
தமிழகத்தில் சமீப நாட்களாக அரசு சார்பில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விற்பனைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது.
இதனை தடுக்க அதிகாரிகள் கடைகளில் திடீர் சோதனை செய்து விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இதனை தடுக்க கேரளா மாநிலத்தில் போல கம்ப்யூட்டர் பில் நடைமுறை கொண்டுவர டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் இது குறித்து டாஸ்மாக் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் தமிழகத்தில் 5 ஆயிரம் டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. அதில் அதிக விலை நிர்ணயம் செய்வது குறித்து புகார் எழுந்துள்ளது. இதுவரை 1967 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் பிரச்சனை சரி செய்ய முடியவில்லை. அதனால் டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபான தொகையை முதல் கவுண்டரில் செலுத்தி பில் வாங்கிக் கொண்டு இரண்டாவது கவுண்டரில் அந்த பில்லை கொடுத்து மதுபானம் வாங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.
மேலும், கம்ப்யூட்டர் பில்லிங் முறையை கொண்டு வருவதா அல்லது கியூ ஆர் கோடு மற்றும் ஆன்லைன் முறையில் பணத்தை செலுத்தி மதுபானம் பெறுவது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Billing and online payment method introduce in tasmac