பைக் டாக்சியில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை - விசாரணையில் சிக்கிய என்ஜினீயர்.!!
bike taxi driver arrested for harassment case in chennai
சென்னையில் உள்ள புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னை தேனாம்பேட்டை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், அந்தப் பெண் நேற்று முன்தினம் வழக்கம்போல் பணி முடிந்து பைக் டாக்ஸி மூலம் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, அந்த பைக் டாக்ஸியை ஓட்டிய நபர், அந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் சம்பவம் குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தார். வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தது நாமக்கல் மாவட்டம் போடி நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சு.சதீஷ்குமாா் என்பது தெரிய வந்தது.

உடனே போலீஸார், சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை செய்ததில், பொறியியல் படிப்பு முடித்துள்ள அவர், தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிவதும், பகுதி நேரமாக பைக் டாக்ஸி ஓட்டுவதும் தெரிய வந்தது.
மேலும், கடந்த 4-ஆம் தேதி அந்தப் பெண் கைப்பேசி செயலி வாயிலாக பைக் டாக்ஸி பதிவு செய்ததும், அப்போது சதீஷ்குமாா் அந்த பெண்ணை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றதும், பின்னா் சதீஷ்குமாா் தினந்தோறும் அந்த பெண்ணை தனது மோட்டாா் சைக்கிளில் ஏற்றிச் செல்வதாக தெரிவித்ததுடன், அதற்குரிய கட்டணத்தை தந்துவிடுமாறு கூறியதும், அதன்படி சதீஷ்குமார் கடந்த 20 நாள்களாக தினமும் அந்த பெண்ணை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சதீஷ்குமாரை சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
bike taxi driver arrested for harassment case in chennai