நம்பிக்கை துரோகம்...! இளம்பெண்ணைச் சீரழித்து மொபைல், பணத்தைப் பறித்த கூட்டாளிகள் அதிரடி கைது...! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி பாத்திமாநகரை சேர்ந்த மொகித் (23) என்பவர், தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து 25 வயது இளம்பெண்ணை மீன்பிடித் துறைமுகம் அருகே அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.அங்கு வைத்து, அந்த பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக மூவரும் இணைந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும், அந்த பெண்ணிடம் இருந்த ரூ.2,500 பணம், ஒரு செல்போன் மற்றும் 2 வெள்ளி மோதிரங்களையும் பறித்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

இந்த விசாரணையின் அடிப்படையில், இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக மொகித், ரிதீஷ் மற்றும் ஜெயக்குமார் திலோத் பெர்லின் (21) ஆகிய 3 பேரையும் காவலர்கள் கைது செய்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்வையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Betrayal trust accomplices who raped young woman and stole her mobile phone and money arrested


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->