நம்பிக்கை துரோகம்: வேலை தேடி வந்த இடத்தில் விபரீதம்...! - இளம்பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் அதிரடி கைது...! - Seithipunal
Seithipunal


திருப்பூரில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி, 19 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பின்னலாடை நிறுவன தொழிலாளியை வடக்கு மகளிர் காவலர்கள்  அதிரடியாகக் கைது செய்தனர்.

திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணமாகி, தனது கணவருடன் பெங்களூருவில் வசித்து வந்தார்.

இதனிடையே, கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, கோபித்துக் கொண்டு அந்த இளம்பெண் திருப்பூர் வந்துள்ளார்.திருப்பூரில் வாழ வழியின்றி தவித்த அந்தப் பெண், தனக்கு ஏற்கனவே அறிமுகமான திருப்பூர் பெரியார் காலனியைச் சேர்ந்த சக்திகுமார் (25) என்பவரிடம் வேலை கேட்டுள்ளார்.

சம்பவத்தன்று, அந்தப் பெண்ணுக்கு நல்ல வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி, பி.என். சாலையில் உள்ள தனது நண்பரின் அறைக்கு சக்திகுமார் அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அந்த இளம்பெண்ணை சக்திகுமார் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்தப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் அளித்தார்.புகாரின் பேரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த காவலர்கள், தலைமறைவாக இருந்த பின்னலாடை (நிட்டிங்) நிறுவன தொழிலாளியான சக்திகுமாரை அதிரடியாகக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

வேலை தேடி வந்த இளம்பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்த இச்சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Betrayal of trust Tragedy strikes where he came looking for work young man who tricked young woman and harassment her arrested


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->