டாஸ்மாக் பாட்டிலுக்கு கூடுதல் ₹10; யார் அந்த பிச்சைக்காரன்..? நறுக்கெனு கேட்ட குடிமகன்கள்..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின் டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் 5000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதில் பல டாஸ்மாக் கடைகள் அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

அதேபோன்று டாஸ்மாக் மது பாட்டில்களில் அதிகபட்ச விலை வரி உட்பட எவ்வளவு என்பது பிரிண்ட் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில் மீது அச்சிடப்பட்ட விலையை விட கூடுதலாக ₹10 பெறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதலாக 10 ரூபாய் பெறப்படுவதை கண்டித்து அப்பகுதியில் பேனர் வைக்கப்பட்டது பேசும் பொருளாகியுள்ளது. அந்த பேனரில் "தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்கள் அதிகபட்ச விலை வரி உட்பட என பிரிண்ட் செய்து விற்பனை செய்யப்படுகிறது. 

ஆனால் அனைத்து டாஸ்மாக்களிலும் அரசு நிர்ணயத்தை விலையை விட கூடுதலாக 10 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. அந்தப் 10 ரூபாய் யாருக்கு செல்கிறது என்று தெரியும் வரை கூடுதல் விலை விற்கக் கூடாது. அப்படி மீறி விற்பனை செய்தால் டாஸ்மாக் இழுத்து மூடப்படும்.

அந்த கூடுதல் 10 ரூபாய் பெரும் பிச்சைக்காரன் யார் என்று எங்களுக்கு தெரிய வேண்டும். அதுவரை கடையை மூடுமாறு டாஸ்மாக் நிறுவனத்திடம் கேட்டுக்கொள்கிறோம்"  என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பேனரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து சித்தர்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த பேனர் அகற்றப்பட்டுள்ளது. பேனர் வைத்த அவர்களே அவற்றை அகற்றி விட்டதாக டாஸ்மாக் மேலாளர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக 10 ரூபாய் பெறப்படுவதாக மதுபானம் வாங்க வந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Banner posted about Rs10 extra in Tasmac went viral


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->