மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காற்று வேக மாறுபாட்டினால், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். அதிலும் குறிப்பாக கடலோர மாவட்டங்களில், 47 கி.மீ முதல் 55 கி.மீ. வரை சூறைகாற்று வீசும்

அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களாக ராமேசுவரத்தில் கடல் வழக்கத்தை விட கொந்தளிப்பாக காணப்பட்டது. மாலை முதல் ராமேசுவரம், பாம்பன், ஏர்வாடி, தங்கச்சி மடம், தொண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த சூறை காற்று வீசியது.

மேலும் தனுஷ்கோடியிலும் வழக்கத்தை விட கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் சூறைகாற்று, கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை இன்று தடை விதித்தது. 

அதற்கான அனுமதி டோக்கன்களும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக ராமேசுவரம் துறைமும் மற்றும் கடற்கரைகளில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ban on fishermans going to sea in rameshwaram


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->