கொரோனாவால் நலிவடைந்த தொழில்., பேக்கிரி கடைகாரர் தற்கொலை..! திருப்பூரில் நடந்த சோகம்...!! - Seithipunal
Seithipunal


தொழில் நஷ்டத்தால் பேக்கிரி உரிமையாளார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் , பல்லடம் பகுதியில் வசித்து வருபவர் கதிரேசன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். அவர் அந்த பகுதியில் ஒரு பேக்கிரி வைத்து நடத்தி வருகிறார்.

கொரோனா தொற்று காரணாமாக தொழிலை சரிவர நடத்த முடியவில்லை இதனால் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். தொழில் நஷ்டம் குறித்து அடிக்கடி தனது நண்பர்களிடமும் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பவதன்று வீட்டில் யாரும் இல்லாத போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொழில் நஷ்டத்தால் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bakery shopkeeper commits suicide due to loss of business


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal