சோகம் - காட்டு யானை தாக்கி ஒன்றரை வயது குழந்தை பலி.!!
baby died for elephant attack in coimbatore
கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை அருகே கடம்பாறை என்ற கிராமத்திற்குள் நேற்று இரவு காட்டு யானை புகுந்தது. இந்த யானை அங்கு உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்த உறங்கிக்கொண்டிருந்த அஞ்சலாஎன்ற பெண்ணையும், அவரது பேத்தியுமான ஹேமாஸ்ரீ ஒன்றரை வயது பச்சிளம் குழந்தையையும் தாக்கியது.
இதில் பச்சிளம் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதற்கிடையே, அஞ்சலாவின் அலறல் சத்தம் கேட்டு விரைந்துச் சென்ற கிராம மக்கள் காட்டு யானையை விரட்டி விட்டு, படுகாயங்களுடன் இருந்த அஞ்சலாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்துச் சென்ற போலீசார் மற்றும் வனத்துறையினர், யானை தாக்கி உயிரிழந்த பச்சிளம் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
baby died for elephant attack in coimbatore