திரைப்படத்துறையில் 314 பேருக்கு விருது..! - Seithipunal
Seithipunal


செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் ''இனி ஒவ்வொரு ஆண்டும், திரைப்பட விருதுகள் வழங்கப்படும்,'' என்று தெரிவித்தார்.

தமிழக அரசு சார்பில், நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் 2009 முதல் 2014ம் ஆண்டு வரையிலான திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில், திரைத்துறை, சின்னத்திரை, தமிழக அரசு எம்.ஜி.ஆர்., திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்கள் என, 314 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அவர்களை  கவுரவிக்கும் வகையில் மகிழ்ச்சி விருதுகளை வழங்கிய பின், செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், 

''தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற போது, கொரோனாவால் திரைப்பட துறை முடங்கியது. அப்போது,  முதல்வர் ஸ்டாலின் திரைப்படத் துறைக்கான விருதுகளை வழங்க, உத்தரவிட்டார்".'அதன்படி, ஆறு ஆண்டுகளுக்கான விருதுகள் தற்போது வழங்கப்படுகின்றன. இனி, ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும்,'' என்றார். 

மேலும், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், ''கடந்த ஆட்சியில் கலைத்துறையின் மீதான பாராமுகத்தால் விருதுகள் வழங்கப்படவில்லை,'' என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசுகையில், ''தமிழில் பெயர் சூட்டினால், 30 சதவீதம் வரி விலக்கு அளித்தவர் கருணாநிதி. அதனால், பல திரைப்படங்கள் தமிழுக்கு மாற்றப்பட்டன. ''தமிழர்களை அழ, சிரிக்க, சிந்திக்க வைக்கும் சமூக சீர்திருத்தவாதிகள் தான் கலைஞர்கள். அவர்களை கவுரவிப்பதில் மகிழ்ச்சி,'' என்று தெரிவித்தார்.

குழந்தை நட்சத்திரங்கள் நிகழ்ச்சியில், பசங்க, காக்கா முட்டை, தங்க மீன்கள் உள்ளிட்ட படங்களின் குழந்தை நட்சத்திரங்களாக விருது பெற்றோர், இளைஞர்களாக வளர்ந்திருந்தனர்.

ஒன்றுக்கும் மேற்பட்ட விருதுகளை இயக்குனர் பாண்டிராஜ், நடிகர் நாசர், பொன்வண்ணன், பாடகர் ஹரிச்சரண் உள்ளிட்டோர் பெற்றனர். களவாணி, மைனா, கும்கி உள்ளிட்ட படங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன.சிறந்த பாடலாசிரியருக்காக மூன்று விருதுகள் மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாருக்கு வழங்கப்பட்டன.அவரின் சார்பில், அவரின் மகனும், மகளும் அவ்விருதினைப் பெற்றனர்.அப்போது, அங்கிருந்த அனைவரும் கைத்தட்டி உற்சாகம் அளித்தனர்.

இவ்விழாவில், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, நடிகர் விமல் உள்ளிட்டோரின் சார்பில், அவர்களின் மனைவியர் விருதுகளை பெற்றனர். குணச்சித்திர நடிகருக்கான விருதை ஒய்.ஜி. மகேந்திரன் பெற்றார். விழாவில், சென்னை மேயர் பிரியா, செய்தித்துறை செயலர் மகேசன் காசிராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் திரைத்துறையினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Awards for 314 people in the film industry


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->