ஆட்டோக்களுக்கு சார்ஜிங் வசதி வேண்டும்..மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைவைத்த ஆட்டோ ஓட்டுநர்கள்!
Auto drivers have submitted a request to the district collector for charging facilities for autos
எல்.பி.ஜி மூலம் ஆட்டோக்களுக்கு சிலிண்டர் நிரப்ப அரசு மற்றும் தனியார் பெட்ரோல் பங்கில் வசதி செய்து தர கூறியும் மேலும் ஆட்டோக்களுக்கு சார்ஜிங் வசதி ஏற்படுத்தி தரக்கூரியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்கள்.
மக்கள் குறை தீர்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்றது,
கடந்த மாதம் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சியர் இம்மாதத்திற்கான மனுக்களை பெற்றுக் கொண்டார்கள்.

இம்மாதம் பெறப்பட்ட மனுக்களில் பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், சுனாமி குடியிருப்பில் குடியிருப்பு வேண்டியும் ஆக்கிரமிப்புகளை அகற்றி தர வேண்டியும், முதியோர் உதவித்தொகை வேண்டியும், உளவாய்க்கால் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றி தர வேண்டியும் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் ஆட்சியரை சந்தித்து ஆட்டோக்களுக்கு எல்.பி.ஜி மூலம் ஆட்டோக்களுக்கு சிலிண்டர் நிரப்ப அரசு மற்றும் தனியார் பெட்ரோல் பங்கில் வசதி செய்து தர கூறியும் மேலும் ஆட்டோக்களுக்கு சார்ஜிங் வசதி ஏற்படுத்தி தரக்கூரியும் மனு அளித்தார்கள்.
மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்கள். மேலும் இம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குறித்த தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட. ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்நிகழ்வில் துணை மாவட்ட ஆட்சியர் வினையராஜ், சிறப்பு அதிகாரி குமரன் வருவாய் அதிகாரி ஸ்ரீஜித் மற்றும் வட்டாட்சியர்கள். நகராட்சி ஆனையர்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
English Summary
Auto drivers have submitted a request to the district collector for charging facilities for autos