இளைஞர்களே ரெடியா.. வேலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்.! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் முத்துரங்கம் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி காலை 8:30 மணி முதல் 3 மணி வரை வேலூர் ஓட்டேரி முத்துரங்கம் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள கல்வித்தகுதியாக 10 வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப் படிப்பு படித்தவர்கள் வரை பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். எனவே வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0416-2290042, 9499055896 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

August 12 Mega employment camp in Vellore


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->