இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. விருதுநகர் மாவட்டத்தில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மாநிலத்தில் உள்ள படித்த மற்றும் கல்வித் தகுதி கொண்ட இளைஞர்களுக்கான தகுதிவாரியான வேலை வாய்ப்பு முகாம்களை மாவட்ட வாரியாக நடத்தி வருகிறது. அதன்படி நாளை விருதுநகர் மாவட்டம் சூலைக்கரையில் வேலை வாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 15 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள கல்வி தகுதியாக எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை கலந்து கொண்டு பயன்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வேலை வாய்ப்பு முகாம் குறித்த கூடுதல் விவரங்களை https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/312308090013 என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

August 11 Mega employment camp in virudhunagar


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?




Seithipunal
-->