பயணிகள் கவனத்திற்கு !!! சென்னை - கும்மிடிப்பூண்டி மின்சார ரயில்கள் ரத்து...! - ரயில்வே அறிவிப்பு - Seithipunal
Seithipunal


சென்னை சென்ட்ரல் – கூடூர் ரயில் பாதையில் மீஞ்சூர் – பொன்னேரி இடையே முக்கியமான பொறியியல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சென்னை – கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் இயங்கும் சில மின்சார ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன.

அதன்படி, மார்ச் 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இரவு 11.20 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி புறப்படும் மின்சார ரயில், மீஞ்சூர் – கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மாற்றாக, மார்ச் 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.50 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி – மீஞ்சூர் இடையே இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அரக்கோணம் – ஜோலார்பேட்டை ரயில் பாதையில் உள்ள பச்சகுப்பம் யார்டில் நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாக மெமு (MEMU) ரயில் சேவைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று காலை 9.30 மணிக்கு காட்பாடி – ஜோலார்பேட்டை இடையே இயக்கப்பட இருந்த மெமு ரயிலும், நண்பகல் 12.15 மணிக்கு ஜோலார்பேட்டை – காட்பாடி இடையே இயக்கப்பட வேண்டிய மற்றொரு மெமு ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த தகவலை சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை முன்கூட்டியே சரிபார்த்து திட்டமிட வேண்டும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Attention passengers Chennai Gummidipoondi electric trains cancelled Railways announcement


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




சினிமா

Seithipunal
--> -->