பயணிகள் கவனத்திற்கு...! திருச்சி கோட்டத்தில் ரெயில் இயக்கத்தில் மாற்றம்...! திருவாரூர் வரை மட்டுமே சேவை...!
Attention passengers Change train operation Trichy division Service only up Thiruvarur
திருச்சி ரெயில்வே கோட்டத்தில் பல்வேறு பொறியியல் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், சில பயணிகள் ரெயில் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, திருச்சி ஜங்ஷனில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்படும் திருச்சி-காரைக்கால் டெமு ரெயில் (எண்: 76820) இன்று (திங்கட்கிழமை) முதல் வரும் 18ஆம் தேதி வரை முழுமையாக அல்லாமல் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நாட்களில், இந்த ரெயில் திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோல், மறுமார்க்கத்தில் இயக்கப்படும் காரைக்கால்-திருச்சி டெமு ரெயில் (எண்: 76819) கூட மேற்கண்ட தேதிகளில் காரைக்கால்-திருவாரூர் இடையே சேவை நிறுத்தப்பட்டு, திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி நோக்கி பயணம் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்படுகின்றது.
பயணிகள் முன்கூட்டியே தங்கள் பயணத் திட்டங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமெனவும், இந்த சேவை மாற்றங்கள் குறித்து திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.
English Summary
Attention passengers Change train operation Trichy division Service only up Thiruvarur