மணல் கடத்தலை தடுத்த VAO மீது கொலை முயற்சி!! அரசு அதிகாரிகளுக்கு அச்சம்!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி பகுதிகளில் அனுமதி இன்றி மணல் கடத்தப்படுவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி மற்றும் அவருடைய உதவியாளர் மகேஸ்வரன் பொது மக்களோடு சென்று லாரியை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 

இதில் வேறொரு பகுதியில் அனுமதி பெற்று விட்டு ஆயக்குடி பகுதியில் மணல் அள்ளியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரிகளை காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லும்படி கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி கூறியுள்ளார். 

அப்போது லாரியை காவல் நிலையத்திற்கு எடுத்து வந்த ஓட்டுநர் கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி, அவருடைய உதவியாளர் மீது லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்து உள்ளார். இது குறித்து ஆயக்குடி காவல் நிலையத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி அளித்த தகவலின் பெயரில் சென்ற இரண்டு காவலர்கள் மீதும் லாரியை ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்து உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து சம்பவத்தில் இருந்து லாரி எடுத்துக்கொண்டு தட்டிச் சென்றுள்ளனர். கொலை முயற்சி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி, அவருடைய உதவியாளர் மற்றும் பொதுமக்கள் ஆயக்குடி காவல் நிலையத்தில் கொலை முயற்சி புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய சில நாட்களுக்குள் மீண்டும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது கொலை முயற்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஏற்கனவே வருவாய் துறை அலுவலர்கள் தங்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் தற்காப்பு கலை பயிற்சி மற்றும் கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ள நிலையில் தற்போது கிராம நிர்வாக அலுவலர் மீது லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்திருப்பது அரசு ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

attempted murder by lorry driver on VAO in dindugal


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->