"யார் காலிலும் விழுக தயார்".. பழங்குடி இன மக்களிடம் கல்விக்காக மன்றாடிய காவல்துறை உதவி ஆய்வாளர்! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த காவல் உதவி ஆய்வாளர்  பரமசிவன் என்பவர் அவரது காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் கல்வி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள  பென்னாலூர் பேட்டை என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பியூலா என்பவர் இருந்து வருகிறார். இந்தப் பள்ளியில் 50 மாணவ மாணவிகள் கல்வி கற்று வந்தனர். இந்நிலையில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் திடீர் நகர் பகுதியில் இருந்து 11 மாணவ மாணவிகள் கல்வி கற்க வரவில்லை.

இந்நிலையில் தலைமை ஆசிரியையின் கோரிக்கையை ஏற்று பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பரமசிவன் திடீர் நகர் பகுதிக்கு சென்று பழங்குடியின மக்களின் கல்வி மற்றும் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவர்களது பெற்றோரிடம் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கொலை செய்தாலும் விட்டு விடுவேன் ஆனால் தயவு செய்து கல்வி மட்டும் கற்காமல் இருக்காதீர்கள் என அவர்களிடம் வேண்டுகோள் வைத்தார்.

யார் காலில் விழுந்து வேண்டுமானாலும் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறேன். தயவுசெய்து உங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் என மன்றாடினார். மேலும் தனது காவல் நிலையத்தின் கதவு அந்த ஊர் பகுதி மக்களுக்காக 24 மணி நேரமும் திறந்தே இருக்கும் எனவும் கூறினார். இதனைத் தொடர்ந்து படிப்பை பாதியிலேயே விட்ட 11 மாணவ மாணவிகளும் மீண்டும் பள்ளிக்கு திரும்பி இருக்கின்றனர். காவல்துறை உதவி ஆய்வாளர் பரமசிவன் அந்த கிராம மக்களிடம் கல்வி பற்றி பேசிய விழிப்புணர்வு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Assistant Inspector of Police appealed to villagers for education of tribals


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->