மாமனார் தலையில் லொஜாக்.. கதறித்துடித்த மாமனார்... மருமகள் வெறிச்செயல்.!! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் மாமனாரை சொத்துக்காக அடித்து கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது. 

அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை காவேரிபாளையம் பகுதியை சார்ந்தவர் தங்கசாமி. இவருக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். இவரது மூத்த மகன் ராமலிங்கம். இவர் கடந்த 2010 ஆம் வருடத்தில் உயிரிழந்துள்ளார். 

இதனையடுத்து தங்கசாமி தனக்கு சொந்தமாக உள்ள நிலத்தில் இரண்டரை ஏக்கரை ராமலிங்கத்தின் மனைவி ராணிக்கு பாகம் பிரித்து வழங்கியுள்ளார். இந்நிலையில், தனக்கு வழங்கிய நிலத்தினை தனது பெயரில் மாற்றம் செய்து தர கூறி தங்கசாமியிடம் ராணி தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சூழ்நிலையில், நேற்று வீட்டு கொட்டகையில் உறங்கிக்கொண்டு இருந்த தங்கசாமியினை, மருமகள் ராணி கட்டையால் தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த தங்கசாமி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி செய்யவே, சிகிச்சை பலனின்றி தங்கசாமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் ராணியை கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ariyalur old man murder by his son wife due to land problem


கருத்துக் கணிப்பு

மழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்?
கருத்துக் கணிப்பு

மழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்?
Seithipunal