அரியலூர் இரட்டை கொலை சம்பவம்! போலீசாரிடம் சிக்கிய கொலையாளியின் பகீர் வாக்குமூலம்! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த பெரியவளையம் கிராமத்தைச் சேர்ந்த மலர்விழி மற்றும் கண்ணகி ஆகியோர் சமைப்பதற்காக அருகில் உள்ள வயலுக்கு காளான் பறிக்க சென்றுள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் இருவரும் திரும்பி வராததால் அவரது உறவினர்கள் வயலுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது மலர்விழியும் கண்ணகியும் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை குறித்து பல்வேறு கோணங்களில் நான்கு தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.

கொலை செய்யப்பட்ட பெண்களுக்கு அரிவாள் விட்டு மட்டுமின்றி சுளுக்கியாளும் குத்தப்பட்டது பிரேத பரிசோதனை போது தெரியவந்தது. இதன் காரணமாக சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று வந்த சிலரை போலீசார் காவல் நிலையம் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சுளுக்கி வைத்து வேட்டையாடுபவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டதில் கழுவந்தோண்டியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் முயல் வேட்டைக்கு சுளுக்கி பயன்படுத்துவது தெரிய வந்தது.

இதை எடுத்து கழுவந்தோண்டியைச் சேர்ந்த சிலரை போலீசார் காவல் நிலையம் வரவழைத்து விசாரணை செய்தனர். குறிப்பாக பால்ராஜ் இடம் இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையில் இரண்டு பெண்களை கொன்றது அவர் தான் என தெரியவந்தது. 

இந்த சம்பவம் குறித்து பால்ராஜ் அளித்த வாக்கு மூலத்தில் "கடந்த 22 ஆம் தேதி பால்ராஜ் சம்பவ இடத்திற்கு வேட்டைக்காக சென்றுள்ளார். அங்கு வயலில் கண்ணகியும் மலர்விழியையும் காளான் பறித்து கொண்டிருந்தனர். இதில் மலர்விழி கழுத்தில் தங்க நகை இருந்ததை கவனித்த பால்ராஜ் அதனை பறிக்க முயன்றுள்ளார். அப்பொழுது மலர்விழி கூச்சலிடமே ஆத்திரத்தில் தான் வைத்திருந்த அரிவாள் கொண்டு அவரை வெட்டியதோடு சுளு ஆகக்கியால் மலர்விழியின் தொடை மற்றும் முதுகு பகுதியில் குத்தினார். இதன் பின்னர் மலர்விழி கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பரித்துள்ளார். 

மலர்விழியின் சத்தத்தை கேட்டு கண்ணகி அங்கு வந்தபோது அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டு உள்ளார். இந்த சம்பவத்தை தன் உறவினர்களுக்கு தெரிவிக்கும் முயற்சியில் போன் செய்துள்ளார். இதைக் கண்ட பால்ராஜ் இந்த சம்பவம் பற்றி கண்ணகி வெளியே கூறினால் மாட்டிக் கொள்ளும் என்ற எண்ணத்தில் கண்ணகியையும் சுளுக்கியால் தொடை மற்றும் தொண்டை பகுதியில் குத்தி தலையில் தாக்கி கொலை செய்துள்ளார். போலீசாரிடம் சிக்காமல் இருக்க அப்பகுதியில் தனது மோட்டார் சைக்கிளிலேயே வலம் வந்துள்ளார். பால்ராஜ் உபயோகப்படுத்திய செல்போன் டவரை அடிப்படையாகக் கொண்டு போலீசார் கைது செய்துள்ளனர் என போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின் முலம் தெரிய வந்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ariyalur double murder case killer arrested


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->