கர்நாடக முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் சாதனையை முடியடிக்கும் சித்தராமையா..! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவின் மிக நீண்ட காலம் பணியாற்றிய முதல்வர் என்ற பெருமையை  சித்தராமையா பெற்றுள்ளார். மறைந்த கர்நாடக முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ், சாதனையைச் இன்று சமன் செய்துள்ளார்.

கர்நாடகாவில் மறைந்த முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவர் இரண்டு முறை மொத்தம் 2,792 நாட்கள் (07ஆண்டுகள் 239 நாட்கள்) முதல்வராக பதவி வகித்துள்ளார். தற்போதைய முதல்வர் சித்தராமையா இன்று இந்தச் சாதனையைச் சமன் செய்து, நாளை அதை முறியடிக்கவுள்ளார்.

முதல்வர் சித்தராமையா தனது முதல் பதவிக்காலத்தில் (2013-2018) 1,829 நாட்கள் பணியாற்றினார். மே 20, 2023 அன்று இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்று பதவி வகித்து வருகிறார். அத்துடன், சித்தராமையா கர்நாடக வரலாற்றில் இதுவரை 16 முறை மாநில பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார். இதுவும் ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது.

இது குறித்து சித்தராமையா கூறியதாவது: 'நான் எந்தச் சாதனையும் படைப்பதற்காக அரசியல் செய்யவில்லை; இது மக்களின் ஆசீர்வாதத்தால் நேர்ந்த ஒரு தற்செயலான நிகழ்வு' என்று கூறியுள்ளார். இந்தச் சாதனையை முன்னிட்டு கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Siddaramaiah surpasses the record of former Karnataka Chief Minister Devaraj Urs


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->