திருமாவளவனுக்கும், கந்தர்வக் கோட்டை எம் எல் ஏ சின்னதுரைக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்த அரியலூர் நீதிமன்றம்..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மீதும், அவரது கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மீதும் வெங்கனூர் போலீசார், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்திருந்தனர். இதற்கான குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்யப் பட்டதையடுத்து, இந்த வழக்கு அரியலூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. 

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம். பி. யுமான தொல். திருமாவளவன் அரியலூர் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துள்ளதால், வரும் ஆகஸ்ட் 7ம் தேதி திருமாவளவன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறி அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 

அதேபோல், கடந்த 2020ம் ஆண்டு அரியலூர் அண்ணாசிலை அருகே நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கந்தர்வக் கோட்டை எம் எல் ஏ வான சின்னதுரையும் கலந்து கொண்டார். 

அப்போது நடந்த அந்த ஆர்ப்பாட்டம் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் இருந்ததாகக் கூறி அரியலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர். 

கந்தர்வக் கோட்டை எம் எல் ஏ சின்னதுரை இந்த வழக்கில் ஆஜராகததால், சின்னதுரைக்கும் அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ariyalur Court Issued Arrest Warrant for Thol Thirumavalan


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->