ஒரே நாளில் ஸ்டாலின் உத்தரவை தூக்கி எறிந்த உடன்பிறப்புகள்! ட்ராமா போடாம கைது பண்ணுங்க - அடித்து ஆடும் அறப்போர் இயக்கம்! - Seithipunal
Seithipunal


திமுகவினர் சாலைகளில் ஓரங்களில் பேனர்கள் வைக்க கூடாது என்று, திமுக தலைவர் ஸ்டாலின் ஒப்புதலோடு அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி இரு தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இந்த விவகாரத்தில் தீவிரமாக களமிறங்கி தமிழக அரசியல் கட்சிகளை வெளுத்து வாங்கிவரும் அறப்போர் இயக்கம், அன்றைய தினமே, "கட்சி நடவடிக்கை எடுப்பது உங்க விருப்பம். ஆனால் சாலைகளில் சட்ட விரோத பேனர்கள் கொடிகள் வைப்பவர்கள் மீது காவல்துறை மூலம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும். அபராதம் கட்ட தவறுபவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும். அப்பொழுது தான் பேனர் விளம்பர சமூக விரோதிகள் தங்கள் சட்ட விரோத செயலை நிறுத்துவார்கள்" என்று கருத்து தெரிவித்திருந்தது.

தொடர்ந்து மறுநாள் திமுகவினர் சாலை நெடுக்க கொடி நட்ட புகைப்பட ஆதாரத்துடன் அறப்போர் இயக்கம் அக்கட்சியின் முக்கிய புள்ளிகளை டேக் செய்து கடுமையாக விமர்சித்து இருந்தது.

அதில், "சாலையில் பேனர் வைக்க கூடாது, கட்அவுட் வைக்க கூடாது, பிளெக்ஸ் போர்ட் வைக்க கூடாது என்று சொன்ன முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கட்சி கொடி வைக்க கூடாது என்று சொல்லவில்லையாம். 

காற்றில் ஆடிக் கொண்டு இருக்கும் இந்த கொடி கம்பங்கள் சரிந்து சாலையில் செல்பவர்கள் மண்டையில் விழுந்தால் யாரும் பொறுப்பில்லையாம். 

ஆளுங்கட்சி கொடி என்பதால் போலீஸ் அகற்ற மாட்டார்களாம். ஆளுங்கட்சியே கொடி வைப்பதால் மற்ற கட்சிகளும் மண்டையை உடைக்கும் கொடி கம்பங்களை வைப்பார்களாம். 

இப்படி கொடி வைக்கும் கட்சிகளை எல்லாம் நாம #அறிவு_இருக்கா என்று கேட்டுக் கொண்டே இருக்கணுமாம். இவர்கள் அறிவு கெட்டதனமாக  தொடர்ந்து இந்த சட்ட விரோத வேலையை செய்து கொண்டு இருப்பார்களாம். 

முதல்வர் சொல்படி அறிக்கை அளிக்கும் ஆர்எஸ் பாரதி என்ன செய்ய போகிறார்? சாலையில் கொடி வைத்தால் விபத்துகள் ஏற்படாது என்று உறுதி அளிப்பாரா? அப்படி விபத்து நேர்ந்தால் பொறுப்பு ஏற்பாரா?" என்று தெரிவிதுர்ந்தது.

இந்நிலையில், இன்று மீண்டும் திமுகவினர் சாலையோரம் பேனர் வைத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள அறப்போர் இயக்கம், "ஒரு கட்சியின் தலைவர் உத்தரவை அவரது கட்சி தொண்டர்கள் மதிக்கிறார்களா மிதிக்கிறார்களா என்பது பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் ஒரு மாநில முதலமைச்சர் பேனர் வைக்காதீர்கள் என்று கெஞ்சுவதும் அதை ஆளுங்கட்சியினர் துளியும் மதிக்காமல் மீறுவதும், காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதும் மிகவும் அருவருப்பை ஏற்படுத்துகிறது. தொலைக்காட்சி சீரியலில் நடிப்பதை விட இவர்கள் மிக பிரமாதமாக நடிப்பதாகவே நினைக்க தோன்றுகிறது. 

இந்த டிராமா போடுவதை நிறுத்திவிட்டு இந்த பேனர் வைத்த சமூக விரோதிகள் மீது காவல்துறை சட்ட நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த ஆபத்தான அருவருப்பான விளம்பரகளுக்கு முடிவு கட்ட முடியும்" என்று தெரிவித்துள்ளது.

 

சமூகவலைத்தள பேச்சு : திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்கட்சி, ஆளும்கட்சி என்று கடந்த 4 வருடங்களாக பேனர் வைக்காதிங்க என்று அறிவிப்பு வெளியிடுவதும், அதையெல்லாம் கண்டுக்காமல் திமுகவினர் வைப்பதும், அறப்போர் இயக்கம் கண்டிப்பதுமாக தொல்லை காட்சி சீரியலை போல தொடர்கதையாகவே சென்று கொண்டு இருக்கிறது.

(பேனரால் உயிரிழப்பு ஏற்பட்டபோது, நீதிமன்றம் போட்ட உத்தரவு ஒன்று இருக்குமே அது என்ன ஆனது? என்று புரட்சியாளர் ஒருவர் கொந்தளிக்க, அது அமேசான் காடுகளின் புதரில் கிடக்கும் என்றவாறே நடையை கட்டுகிறார் தமிழகத்தின் சாதாரண மனிதன்)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arappor Iyakkam Condemn DMK AnD TN Govt 2023


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->