ஆரணி வேம்புலி அம்மன் திருவிழா அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


உலகப் புகழ்ப் பெற்ற  ஆரணி -வேம்புலி அம்மன் ஆடித்திருவிழா  அறிவிப்பு..!

ஆரணி  பல்வேறு புகழ் பெற்ற நகரம். ஆரணி பட்டு உலகப் பெற்றது. ஆரணி அரிசி சுவைக்க ருசியானது. இத்துடன் கூடுதல் பெருமை ஆரணி வேம்புலி  அம்மன் திருவிழா. சுத்துப்பட்டு  ஊர்களுக்கு எல்லாம்  வேம்புலி அம்மன் திருவிழா  என்றாலே ஜாலியோ ஜாலிதான்.. மக்கள் வெள்ளம் கோட்டை மைதானத்தை நிறைக்கும்.  

 

புகழ்பெற்ற சினிமா   இசைப்பாளர்கள்  தலைமையில்  கச்சேரி தூள் கிளப்பும். ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதத்தில் இந்த அம்மனுக்கு கூழ் ஊற்றி விழா எடுப்பது வழக்கம். இந்த ஆண்டு நடக்குமா? என  பக்தர்களும் பொதுமக்களும் எதிர்ப்பார்த்திருந்த சூழலில், 

கொரானா நோய்ப் பரவல் காரணமாக, வரும் 23 ஆம் தேதி ஆடி முதல் வெள்ளியன்று அம்மன் அமர்ந்திருக்கும்  கோட்டை மைதானத்திற்குள்ளே எளிமையான முறையில் கூழ் ஊற்றி  அபிஷேக ஆராதனை நடத்தப்படும் என கோயில் நிர்வாகமும் விழாக் குழுவினரும் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arani Vembuli Amman Festival Announcement


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal