ஈரோடு அருகே சோகம்.! யானை துரத்தியபோது கீழே விழுந்த வேட்டை தடுப்பு காவலர் பலி.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் யானையை விரட்ட சென்ற போது கீழே விழுந்து படுகாயம் அடைந்த வேட்டை தடுப்பு காவலர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்து சூசைபுரம் பகுதியை சேர்ந்தவர் லெனின்ராஜ் (26). இவர் தாளவாடி வனச்சரக்கத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த ஐந்தாம் தேதி இரியபுரம் கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானையை விரட்டுவதற்காக லெனின்ராஜ் உட்பட வேட்டை தடுப்பு காவலர்கள் நான்கு பேர் சென்றனர்.

அப்பொழுது அவர்களை யாணை துரத்தியதில் லெனின்ராஜ் கீழே விழுந்துள்ளார். இதையடுத்து மற்ற காவலர்கள் யானையை விரட்டி அடித்தனர். இந்நிலையில் இவர்கள் நான்கு பேரும் யானை மீண்டும் ஊருக்குள் வந்தால் அதனை விரட்டுவதற்காக வனத்துறை ஜீப்பிலையே படுத்து உறங்கி உள்ளனர்.

ஆனால் காலையில் எழுந்து பார்த்தால் லெனின் ராஜ்ஜின் மூக்கில் ரத்தம் வழிய சுயநினைவின்றி கிடந்துள்ளார். இதையடுத்து அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட லெனின்ராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இரவு யானை துரத்திய போது கீழே விழுந்ததால் லெனின் ராஜிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதை அறியாமல் தூங்க சென்றதே அவரது உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் யானையை விரட்ட சென்றபோது கீழே விழுந்து படுகாயமடைந்து உயிரிழந்த லெனின்ராஜ் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வனத்துறையிடம் வேட்டை தடுப்பு காவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anti poaching guard who fell down while chasing an elephant was killed in erode


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->