12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணைபடி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

அதன்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8,51,303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23,747 பேரும் என மொத்தம் 8,75,050 பேர் எழுத இருந்தனர். இதனையடுத்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3225 இடங்களில் இதற்காக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வான தமிழ் மொழித்தேர்வை 50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இதுகுறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது குறித்து கல்வித்துறை அமைச்சரிடம் பேசி மீண்டும் தேர்வெழுத வாய்ப்பளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Another chance for students did not appear in the 12th public exam


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->