திமுகவின் 27 முக்கிய புள்ளிகளிடன் 2 லட்சம் கோடி ரூபாய் சொத்து - பட்டியலை வெளியிடும் அண்ணாமலை!
Annamalai say about DMK minister Property value in April
வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியில் வெளியிடப்படும் என்று, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தென்காசியில் நடைபெற்ற பாஜகவின் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுகவைச் சேர்ந்த 27 முக்கிய பிரமுகர்களிடம் இரண்டு லட்சத்தி 24 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பொதுக் கூட்டத்தில் அண்ணாமலை பேசிய விவரம் பின் வருமாறு : வருகின்ற தமிழ் புத்தாண்டு சித்திரை 1, ஏப்ரல் 14ஆம் தேதி ஒரு மாபெரும் திருவிழாவாக, ஊழலுக்கு எதிரான திருவிழாவாக இந்த ஆண்டு இருக்கப் போகிறது.
அன்றைய தினம் பாரதிய ஜனதா கட்சி, திமுக அமைச்சர்கள் உடைய சொத்து பட்டியலை வெளியிட உள்ளது. மேலும் திமுக எம்எல்ஏக்களின் சொத்து பட்டியலும் வெளியிடப்பட உள்ளது.

இந்த பட்டியல் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். அது என்னவென்றால் நான் விடப் போகின்ற சொத்து பட்டியல், திமுகவின் 27 புள்ளிகளின் சொத்து பட்டியல் மட்டுமே.
அந்த பட்டியலில் உள்ள அவருடைய சொத்து மதிப்பு மட்டுமே இரண்டு லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
English Summary
Annamalai say about DMK minister Property value in April