திருப்பூர் குமரன் 118-ஆவது பிறந்தநாள்.. அமமுக சார்பில் மரியாதை.! - Seithipunal
Seithipunal


தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் 118-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அ.ம.மு.க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தேசத்திற்காக தன் இன்னுயிரை ஈந்த கொள்கைப் பற்றாளர், இந்திய விடுதலைப் போராட்டத்தில் மறக்கமுடியாத வீரராக திகழ்ந்த தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் 118வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், திருப்பூர் இரயில் நிலையம் அருகில் உள்ள மணிமண்டபத்தில் அமைந்திருக்கும் அன்னாரது திருவுருவச் சிலைக்கு கழக தலைமை நிலைய செயலாளரும், திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு.C.சண்முகவேலு, 

கழக தேர்தல் பிரிவு துணைச்செயலாளரும், முன்னாள் மேயருமான திருமதி.A.விசாலாட்சி, திருப்பூர் மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.P.ஈஸ்வரன், திருப்பூர் மாநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திருமதி.R.ஜோதிமணி,

மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட / வார்டு, ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக தொண்டர்கள் என திரளானோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AMMK TTV Dhinakaran Supporters Tiruppur Kumaran 4 Oct 2021


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->