ஆம்பூர் அருகே கொடூரம்: ஆம்னி பேருந்து விபத்தில் ஓட்டுநர் பலி!
ambur bus accident
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்ததுடன் 23 பேர் காயமடைந்தனர்.
சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு 25 பயணிகளுடன் சென்ற சொகுசு பேருந்து, சிமெண்ட் தூண்கள் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியின் பின்புறம் மோதியது. தூக்கக் கலக்கத்தால் வேகமாக ஓட்டிய பேருந்து ஓட்டுநர் ஹரிஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பேருந்தில் இருந்த 23 பயணிகள் பலத்த காயமடைந்தனர். உடனடியாக ஆற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, காயமடைந்தவர்களை ஆற்காடு தனியார் மருத்துவமனைக்கும், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் கிரேன் மூலம் பேருந்து அப்புறப்படுத்தப்பட்டது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.