வலையோடு கனவுகளும் பறிபோனது....! மீண்டும் நெடுந்தீவு அருகே 7 தமிழக மீனவர்கள் கைது...!
Along nets dreams snatched away Seven Tamil Nadu fishermen arrested again near Neduntheevu
தமிழக–புதுச்சேரி கடற்பரப்பில் வாழ்வாதாரம் தேடி செல்லும் மீனவர்களுக்கு, எல்லை என்பது எப்போதும் ஒரு பயமூட்டும் தடையாகவே மாறியுள்ளது. கடலுக்குள் செல்லும் ஒவ்வொரு முறையும் “எல்லை மீறல்” என்ற குற்றச்சாட்டின் பெயரில் இலங்கை கடற்படை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும், சில நேரங்களில் தாக்கி விரட்டுவதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

இதனால் நூற்றுக்கணக்கான மீனவர் குடும்பங்களின் வாழ்வு அலைகளில் சிக்கி தவித்து வருகிறது.இந்தச் சூழலில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 7 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டியதாக கூறி திடீரென கைது செய்துள்ளது.
மயிலாடுதுறை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குப் புறப்பட்ட இந்த மீனவர்களிடமிருந்த 2 நாட்டுப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கைதான மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று, தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம், மீனவர் சமூகத்தில் மீண்டும் கவலையையும் பதற்றத்தையும் விதைத்துள்ளது.
English Summary
Along nets dreams snatched away Seven Tamil Nadu fishermen arrested again near Neduntheevu