காவல்துறையினருடன் இணைந்து அனைத்து ஜமாத்துகளும் செயல்படும்! - Seithipunal
Seithipunal


கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் அனைத்து ஜமாத்துக்கு கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோவை மாநகர கமிஷனர் பாலகிருஷ்ணன், எஸ்.பி பத்ரி நாராயணன், ஆர்.டி.ஓ இளங்கோ, ஆர்.டி.ஓ லீலாஅலெக்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் "கார் வெடிப்பு சம்பவம்  போன்ற அசம்பாவிதம் நடக்காமல் இருக்க ஜமாத் நிர்வாகிகள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை தமிழக அரசுக்கு தெரிவிக்க வேண்டும். மத நல்லிணக்கத்தை பேணி காக்கும் வகையில் மத நல்லிணக்க கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அதற்கு இஸ்லாம் ஜமாத் நிர்வாகிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சம்பவத்திற்கு பின் கோவையில் போலீசாரின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் அமைதியை நிலைநாட்ட பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார். 

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கோவை மாவட்ட சுன்னத் ஜமாத் பொதுச் செயலாளர் இனையதுல்லா "கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் எந்த ஜமாத்திலும் இயக்கத்திலும் அங்கம் வகிக்காதவர்கள் அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் நோக்கத்தில் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினருடன் இணைந்து அனைத்து ஜமாத்துகள் செயல்படும்" என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

All Jamaath work together with kovai police


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->