பொள்ளாச்சியில் அதிமுக போராட்டம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
AIADMK protest in Pollachi Edappadi Palaniswamis announcement
பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகச் சீர்கேடுகளை கண்டித்து 13.8.2025 – புதன்கிழமை காலை 10 மணியளவில், பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,பொள்ளாச்சி நகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளை கண்டித்தும், மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், ,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னேற்றக் கழக பொள்ளாச்சி நகரத்தின் சார்பில், 13 தேதி புதன்கிழமை காலை 10 மணியளவில், பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்., மேலும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளை கண்டும் காணாமலும் இருந்து வரும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் போராட்டம் நடைபெறும்,
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொள்ளாச்சி நகரத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், நகர மன்ற இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
English Summary
AIADMK protest in Pollachi Edappadi Palaniswamis announcement