எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த அதிமுக - பாமக சட்டமன்ற உறுப்பினர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மே 2 ஆம் தேதி வெளியான நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி அடைந்தது. அதிமுக தலைமையிலான கூட்டணி 75 இடங்களில் வெற்றி அடைந்தது. 

கொங்கு மண்டலத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றியடைந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் 8 தொகுதிகளில் அதிமுகவும், பாமக 2 தொகுதிகளையும் கைப்பற்றியது. மேலும், தருமபுரி மாவட்டத்தின் 5 தொகுதிகளில் அதிமுக மற்றும் பாமக வேட்பாளர்கள் அமோக வெற்றியடைந்தனர். 

இந்நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிச்சாமி சுமார் 93802 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார். இதனையடுத்து, சேலம் நெடுஞ்சாலை நகரில் இருக்கும் வீட்டில் எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் நிலையில், அவரை முன்னாள் அமைச்சர்கள் பலரும் சந்தித்து பேசினர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் வெற்றியடைந்த சேலம் தெற்கு வேட்பாளர் பாலசுப்பிரமணியன், வீரபாண்டி தொகுதி ராஜமுத்து, சங்கரிரி தொகுதி சுந்தரராஜன், ஏற்காடு தொகுதி சித்ரா, ஆத்தூர் தொகுதி ஜெய்சங்கரின், கெங்கவல்லி தொகுதி நல்லதம்பி, ஓமலூர் தொகுதி மணி, சேலம் மேற்கு தொகுதி பாமக அருள், மேட்டூர் தொகுதி பாமக சதாசிவம் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து பேசினர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK PMK MLA Meets Edappadi Palanisamy at Salem 4 May 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal