ஷிகர் தவான் – சோஃபி ஷைன் நிச்சயதார்த்தம்: 2வது திருமணம்.. யார் இந்த சோஃபி ஷைன்?
Shikhar Dhawan Sophie Shine Engagement 2nd Marriage Who is this Sophie Shine
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷிகர் தவான், தனது காதலி சோஃபி ஷைன் உடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் சமூக வலைதளங்கள் மூலம் வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.
ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்ட இதய வடிவ பூங்கொத்தின் முன், சோஃபி ஷைனின் கையை தனது கையில் பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை ஷிகர் தவான் பகிர்ந்துள்ளார். அதனுடன்,“ஒன்றாகச் சிரிப்பதில் இருந்து ஒன்றாகக் கனவு காண்பது வரை. இந்த அன்புக்கும் எங்கள் நிச்சயதார்த்தத்திற்கும் உங்கள் அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி. நாங்கள் என்றென்றும் ஒன்றாக இருக்க முடிவு செய்துள்ளோம்”என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த நிச்சயதார்த்த அறிவிப்பு, ஷிகர் தவானின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கமாக பார்க்கப்படுகிறது. இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷிகர் தவானுக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011-ஆம் ஆண்டு அவர் ஆயிஷா முகர்ஜி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில், கருத்து வேறுபாடுகள் காரணமாக 2023-ஆம் ஆண்டு இருவரும் சட்டபூர்வமாக பிரிந்தனர். அதன்பிறகே ஷிகர் தவானுக்கும் சோஃபி ஷைனுக்கும் நட்பு உருவாகி, அது காதலாக மாறியுள்ளது.
தற்போது நிச்சயதார்த்தம் மூலம் அந்த உறவை வெளிப்படையாக அறிவித்துள்ள ஷிகர் தவான், தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை மகிழ்ச்சியுடன் தொடங்கியுள்ளார். இந்த மகிழ்ச்சியான தருணத்திற்கு கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Shikhar Dhawan Sophie Shine Engagement 2nd Marriage Who is this Sophie Shine