நீட் நுழைவுத் தேர்வால் உயிரிழந்த மாணவ ,மாணவிகளுக்கு அதிமுகவினர் அஞ்சலி!
AIADMK pays tribute to students who lost their lives due to NEET
நீட் தேர்வால் உயிரை இழந்த மாணவ மாணவிகளுக்கு ராணிப்பேட்டை மேற்கு (ம) கிழக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் மெழுகு வத்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்வோம் என்ற பொய் பிரச்சாரம் மூலம் மாணவர்களிடையே பொய்யான நம்பிக்கையை விதைத்து ஆட்சியை பிடித்த விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய காரணத்தினால் தங்கள் உயிரை இழந்த மாணவ மாணவிகளுக்கு ராணிப்பேட்டை மேற்கு (ம) கிழக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் மெழுகு வத்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராணிப்பேட்டை மேற்கு விஜய்ஆனந்த் துவக்க உரைமாவட்ட மாணவரணி செயலாளர் ராணிப்பேட்டை கிழக்கு பிரபு தலைமையேற்று கண்டனப் பேருரை ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம் .சுகுமார்,ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன பேருரை ஆற்றி இன்னுயிர் நீர்த்த மாணவ மாணவிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினார்கள்,
இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சுமைதாங்கி சி.ஏழுமலை. ராணிப்பேட்டை நகரக் கழக செயலாளர் நகர மன்ற உறுப்பினர் கே.பி. சந்தோஷம், முன்னிலை வகித்தார்.அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் மாநில நிர்வாகிகள் ராணிப்பேட்டை மேற்கு, கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி கழக செயலாளர்கள், மாவட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி கழக சார்பு அணி நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மகளிர் அணி சகோதரிகள், மாவட்ட மாணவரணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், கழக மாணவரணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாணவ மாணவிகள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
English Summary
AIADMK pays tribute to students who lost their lives due to NEET